search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்யூனிஸ்டு கட்சி"

    • தேர்தலில் இந்தியா கூட்டணி எப்படி சாதிக்கப் போகிறது என்ற எண்ணம் கூட்டணி கட்சிகளிடமும் இருக்கிறது.
    • காங்கிரசுக்கு அசட்டு நம்பிக்கை இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி தேர்தல் வரையாவது நீடிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர் நிதிஷ்குமார். அவரே கூட்டணியை உடைத்து விட்டு பா.ஜனதாவோடு ஐக்கியமாகிவிட்டார்.

    டெல்லி, பஞ்சாப், அரியானாவில் காங்கிரசுக்கு கை கொடுக்க அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துவிட்டார்.

    மேற்கு வங்கத்திலும் மம்தா பானர்ஜி தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டார். தேர்தலில் இந்தியா கூட்டணி எப்படி சாதிக்கப் போகிறது என்ற எண்ணம் கூட்டணி கட்சிகளிடமும் இருக்கிறது.

    கேரளாவை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இருந்தாலும் அங்கு காங்கிரசும் கம்யூனிஸ்டும் எதிரும், புதிருமாக இருக்கிறது.

    தேர்தல் பிரசாரத்தில் சிக்கல் ஏற்படும் என்பதற்காக ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை கூட கம்யூனிஸ்டு கட்சி விரும்பவில்லை. மற்ற வடமாநிலங்களிலும் மிக குறைந்த தொகுதிகளிலேயே போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

    இந்தியாவில் பாரம்பரியமான கட்சி. 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட கட்சி. இப்போது சீட்டுக்காக மற்ற கட்சிகளி டம் கையேந்தும் அளவுக்கு 'கை' பலவீனமாக உள்ளது.

    இந்த சூழ்நிலையிலும் காங்கிரசுக்கு அசட்டு நம்பிக்கை இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது தென் மாநில 100 தொகுதிகள் என்ற இலக்கை வைத்து உள்ளது. எந்தெந்த மாநிலங்களில எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும் என்று மேலிட தலைவர்கள் குத்து மதிப்பாக ஒரு கணக்கை போட்டு உள்ளார்கள்.

    தமிழ்நாடு, புதுவையில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இதில் 40-க்கு 40 என்று திட்டமிட்டுள்ளார்கள்.

    காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் கூட நூறு சதவீதம் வெற்றி பெறுமா என்று கள ஆய்வு நடத்தியே தி.மு.க. வழங்க உள்ளது. வெற்றி தான் முக்கியம் என்ற எண்ணத்தில் தி.மு.க.வின் வேண்டுகோளை காங்கிரசும் ஏற்றுக்கொண்டு உள்ளது.

    முக்கியமாக அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் தனித்து போட்டியிடுவதில் வாக்குகள் பிரியும். அது தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்குத் தான் சாதகமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை கம்யூனிஸ்டுக்கும், காங்கிரசுக்கும் தான் போட்டி. ஆனால் இரண்டில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் அது இந்தியா கூட்டணிக்கே லாபம் என்று கருதுகிறார்கள்.

    எனவே மொத்தமுள்ள 20 தொகுதிகளும் தங்கள் கைக்கு வரும் என்று கணித்துள்ளார்கள்.

    கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 27 தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. எனவே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு தொகுதிக்கு ஒரு மந்திரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

    அதே நேரம் பா.ஜனதாவும் பலமாக இருப்பதால் குறைந்தபட்சம் 15 தொகுதி களாவது வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார்கள்.

    தெலுங்கானாவில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 17. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஏற்கனவே 3 இடங்களில் வெற்றி பெற்றது.

    எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகள் குறையாமல் வெல்வோம் திட்டமிட்டுள்ளனர்.

    ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரையில் மொத்தம் 25 தொகுதிகள் அங்கு வலுவான நிலையில் இருப்பது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்தான். ஆனால் சமீபத்தில் அந்த மாநில முதல்-மந்திரி ஜெகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரசில் இணைந்தார். இது காங்கிரசுக்கு ஓரளவு வலு சேர்க்கும் என்று கருதுகிறார்கள்.

    எனவே 15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கணித்துள்ளார்கள். எனவே 90 முதல் 100 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று கருதுகிறார்கள். இந்த கனவு நிறை வேறுமா? என்பது தேர்தலில்தான் தெரியும்.

    • ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது

    ஆரல்வாய்மொழி :

    வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவையை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மறியல் போராட்டத்தையொட்டி பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    • மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள தினக்கூலி ஊதியம் ரூ.690 வழங்க வேண்டும்.
    • சாலை மறியல் போராட்டத்தில் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    நாகர்கோவில் :

    மாநகராட்சி, நகராட்சி கள், பேரூராட்சிகளில் நிரந்தர பணியாளர்களை நீக்கி தனியாரிடம் தாரை வார்க்கும் அரசாணையை கைவிட வேண்டும். டெங்கு பணியாளர்கள் அனைவரையும் முழு நேர பணியாளர்களாக அறிவித்து மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள தினக்கூலி ஊதியம் ரூ.690 வழங்க வேண்டும்.

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தினக்கூலி, சுய உதவிக்குழு, ஒப்பந்த தொழிலாளி என பல்வேறு பெயர்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குமரி மாவட்ட கிளை சார்பில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத் திற்கு குமரி மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்க செயலாளர் ஸ்டாலின் தாஸ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் சுடலை மற்றும் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரம், மாநில குழு உறுப்பினர்கள் அந்தோணி, இந்திரா, சித்ரா, பெருமாள் உள்பட ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முற்றுகையிட வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்தபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    சாலை மறியல் போராட்டத்தில் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் பஸ்களில் ஏற்றி அந்த பகுதியில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கவர்னர் அறியாமையினால் காரல்மார்க்சை பற்றி இழிவான கருத்துக்களை கூறி உள்ளார்.
    • வருகிற 28-ந்தேதி மாவட்டந்தோறும் கறுப்பு கொடி போராட்டம் நடைபெறும்.

    சென்னை:

    மாமேதை காரல் மார்க்சை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இழிவாக பேசினார் என கூறி இன்று காலை கவர்னர் மாளிகை அருகே சைதாப்பேட்டை சின்னமலை ராஜீவ்காந்தி சிலை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கவர்னர் அறியாமையில் பேசுகிறார் என்று கைதட்டி சிரிக்கும் நூதன போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். அகில இந்திய செயலாளர் அமர்ஜித் கவுர், மாநில துணை செயலாளர் வீர பாண்டியன், பெரியசாமி, ஆகியோர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன் பேசியதாவது:-

    கவர்னர் அறியாமையினால் காரல்மார்க்சை பற்றி இழிவான கருத்துக்களை கூறி உள்ளார். அவர் இதுபோன்று அடிக்கடி பேசி வருகிறார். கவர்னர் கூறிய கருத்துக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டம் நடைபெறும்.

    வருகிற 28-ந்தேதி மாவட்டந்தோறும் கறுப்பு கொடி போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    போராட்டத்தையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • அதானி குழும மோசடிகளை விசாரிக்க குழு அமைக்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், அதானி குழுமத்தில் பல்லாயிரம் கோடி பங்கு சந்தை மோசடிகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைத்திட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வேலாயுதம், ஜீவா, அஷ்ரப்அலி, மகாலிங்கம், தங்கவேலு, மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர ஒன்றிய செயலாளர் டி.ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.

    தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க தலித்பாஸ்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது பட்ஜெட்டை போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், ஏழை, எளியவர்கள், மக்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளதை கண்டித்தும்.

    தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், சிறு குரு நடுத்தர தொழில் முனைவோர், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோர் வாழ்க்கை நலனுக்கு எவ்வித உத்தரவாதம் தராத பட்ஜெட்டை கண்டித்தும்.

    கிராமப்புற வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியைகூட ஒதுக்காமல் குறைக்கப்பட்டதை கண்டித்தும்.

    அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு சந்தை மோசடிகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு குழுவை அமைக்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ×